search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் போட்டி"

    செங்கல் சூளையில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும் தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உள்ள புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (வயது 38). இவரது மனைவி விஜயசாந்தி (32). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சோலையப்பன் செங்கல் வியாபாரம் செய்து வந்தார்....இதில் இவருக்கும் கடன் பிரச்சினை உள்ளதாகவும், இதனால் இவர் தினமும் குடிப்பதாகவும், இதனை விஜயசாந்தி கண்டிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், செங்கல் சூளையில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும் தெரிகிறது.இவர் கடந்த 2 ஆண்டுகளாக உளுந்தூர்பேட்டை எடைக்கல் காப்புக்காட்டில் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். ஒரு சில நாட்கள் அங்கேயே தங்கி சூளை பணிகளை மேற்கொண்டு வந்தார் எனத் தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று காலை சூளையின் அருகே சோலைப்பன் இறந்து கிடப்பதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். சோலையப்பன் நெற்றியில் வெட்டு காயம் இருந்தது, மேலும், அருகில் இருந்த மோட்டார் கொட்டகையின் தளத்தில் கைலி தொங்கி கொண்டிருந்தது.இதையடுத்து உளுந்தூ ர்பேட்டை போலீசார் அங்கிருந்த சூளை தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் இரவு சோலையப்பன் மற்றும் அவரது நண்பர்களான செந்தில், குமார் ஆகியோர் சூளையில் அமர்ந்து மது குடித்தது தெரியவந்தது.பின்னர் காலையில் பார்க்கும் போது சோலையப்பன் இறந்து கீழே கிடந்தாகவும், அவருக்கு அருகில் செந்தில், குமார் ஆகியோர் இருந்தாகவும் சூளையில் தங்கி பணி செய்யும் ஊழியர்கள் போலீசாரிடம் கூறினார்கள்.தொடர்ந்து கொள ஞ்சியப்பனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து செந்தில், குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சோலையப்பன் மனைவி விஜயசாந்தி, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தொழில் போட்டி அல்லது தகாத உறவில் தொடர்புடையவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறினார்.பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே, கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும் என்று போலீசார் கூறி, விஜயசாந்தியிடம் புகார் பெற மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • கேரள மாநிலம் திருச்சூரில் மணிகண்டன் இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
    • மணிகண்டனுக்கும், அவரது உறவினருக்கும், முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் தெற்கு பணவடலி சத்திரத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 40).

    கொலை

    இவர் கேரள மாநிலம் திருச்சூரில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் மதுரை யில் வசித்து வந்தனர்.

    கடந்த 8-ந் தேதி கோவில் கொடை விழாவிற்காக மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் பணவடலிசத்திரம் வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மணிகண்டன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    காரணம் என்ன?

    இதுதொடர்பாக பணவடலிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மணிகண்டனுக்கும், பணவடலிசத்திரத்தை சேர்ந்த அவரது உறவினருக்கும், முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் அப்பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை.

    தொழில் போட்டி காரணமா?

    இதற்கிடையே தொழில் போட்டி காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கி றார்கள்.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் கேரளா சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று அருணாச்சலத்திற்கும், திருமன்னாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • அருணாச்சலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்னும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில் :

    கோட்டாறு வடலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் திருமன்னார் (வயது 65). ஈத்தாமொழி செம்பொன் கரை பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 63) .

    இவர்கள் இருவரும் கோட்டாறு பகுதியில் அரிசி கடை வைத்துள்ளனர். இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று அருணாச்சலத்திற்கும், திருமன்னாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அருணாச்சலம் அரிவாளால் திருமன்னாரை முதுகு,தோள்பட்டை, கை பகுதியில் சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அருணாச்சலத்திற்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

    உடனே அருணாச்சலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்னும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயமடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • வடக்கு போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காலேஜ் ரோடு கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 35). இவர் கட்டிட மேஸ்திரி. இவருடன் கட்டிட தொழிலாளியாக மாஸ்கோ நகரை சேர்ந்த சரவணன் (35) என்பவர் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சரவணன், தனியாக சென்று கிருஷ்ணனுக்கு தெரிந்தவரிடம் இருந்து தனக்கு கட்டிட வேலை கொடுக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் தனது வேலைக்கு போட்டியாக சரவணன் செயல்படுவதை கிருஷ்ணன் கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லம்பாளையத்தில் கிருஷ்ணன் நின்றபோது அங்கு சரவணன் வந்துள்ளார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சரவணன், அரிவாளால் கிருஷ்ணனின் முதுகு, தொடை பகுதிகளில் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வடக்கு போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    • ரெஜிக்கும் கிறிஸ்டோபர் ஜாணுக்கும் செங்கல் சூளை நடத்துவதில் தொழில் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.
    • தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி கடவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜாண் (வயது 56) செங்கல் சூளை நடத்தி வருகிறார்.


    இவருக்கும் சிதறால் வருக்கவிளையை சேர்ந்த ரெஜி (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்டோபர் ஜாண் வீட்டின் காம்பவு ண்டின் உள்பகுதியில் நின்றபோது ரெஜி (43), ஆல்பர்ட் ராஜ் (42), சத்யன் (40), வர்கீஸ் (40) ஆகியோர் சேர்ந்து கிறிஸ்டோபர் ஜாணை கம்பியால் அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயமடைந்த கிறிஸ்டோபர் ஜாணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


    இது குறித்து மார்த்தா ண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். ரெஜி மார்த்தா ண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ரெஜிக்கும் கிறிஸ்டோபர் ஜாணுக்கும் செங்கல் சூளை நடத்துவதில் தொழில் போட்டி உள்ளதாகவும், இதில் இருவருக்கும் முன் விரோதம் இருந்ததாலும் சம்பவத்தன்று ரெஜி தந்தையின் கல்லறையின் அருகாமையில் நின்றபோது கிரிஸ்டோபர் ஜாண், ரெஜியை கம்பியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

    இதனையடுத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 5 பேர் மீது ழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×